ஒரு கடை திறப்பு விழாவிற்கு வர நடிகை ஓவியா இவ்வளவு சம்பளம் வாங்கினாரா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சிறு நடிகையாக அனைவராலும் பார்க்கப்பட்டார். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிரடி காட்ட தமிழ் மக்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
அவர் செய்த விஷயங்கள், பாடிய பாடல், சொன்ன வார்த்தைகள் என எல்லாமே பிரபலம் ஆனது. அந்த வார்த்தைகளை வைத்து சில பாடல்கள் கூட உருவாகியது.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு முடிந்து சில காலம் வரை இளைஞர்கள் ஓவியா ஓவியா என்று கூறி வந்தார்கள், இப்போது அவர் என்ன செய்கிறார் என்று கூட தெரியவில்லை.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்த நேரத்தில் நிறைய விளம்பரங்கள், கடை திறப்பு விழா என கலந்துகொண்டார். புதிய சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் ரூ. 1 கோடி வரை சம்பளம் பெற்றார் என்கின்றனர்.
ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு சரியானது என்பது தெரியவில்லை.