என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. பண விஷயத்தில் ஏமாந்த ஓவியா?
நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விலகி இருந்த நேரத்தில் பிக் பாஸ் வாய்ப்பு அவருக்கு வந்தது. தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அவருக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கும் அளவுக்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.
பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஏமாற்றிவிட்டார்கள்..
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஓவியா தன்னை பலரும் காதலித்து ஏமாற்றிவிட்டார்கள் என பேசி இருக்கிறார்.
மேலும் பண விஷயத்திலும் சிலர் ஏமாற்றியதாக அவர் கூறி இருக்கிறார். அதனால் ஓவியாவை ஏமாற்றியது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri