32 வயதாகியும் திருமணம் செய்யாத ஓவியா.. அதற்கு சொன்ன காரணம்
நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஓவியா. அவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின் மூலமாக தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
ஓவியா பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக பெரிய அளவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த 90ml என்ற படம் அவரது கெரியரையே காலி செய்து விட்டது என சொல்லலாம்.
அதன் பிறகு தற்போது குறைந்த அளவில் மட்டுமே ஓவியா படங்கள் நடித்து வருகிறார்.

திருமணம் எப்போ?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒவியாவிடம் திருமணம் பற்றி கேட்டிருக்கிறார்கள். "நான் இப்போ சிங்கிளாக தான் இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என நினைக்கவில்லை. "
"திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமைய வேண்டும். நாம அதன் பின்னால் போக கூடாது. அது வந்தால் ஓகே, இல்லை என்றாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன்."
"யாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான் தனியாக இருப்பதை விரும்புகிறேன்" என ஓவியா கூறி இருக்கிறார்.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri