இயக்குனர் பா. ரஞ்சித்தின் அடுத்த பட கதாநாயகன் இவர் தானா - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பா. ரஞ்ஜீத்.
இதன்பின் ரஜினியுடன் கைகோர்த்து, கபாலி, காலா என இரு படங்களை இயக்கினார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார் ரஞ்சித்.
தற்போது 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை என்ற படத்தை வெளியிட உள்ளார் ரஞ்சித்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் கோலிவுட்டில் ஆர்யாவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் இயக்குனர் பா ரஞ்ஜீத் சூர்யாவுடன் இணைய போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
கதை குறித்தும் சூர்யாவுடன் இயக்குனர் பா. ரஞ்ஜீத் பேசியுள்ளதாகவும், சில தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அப்டேட்டிற்காக..