லோகேஷ் படத்தை விமர்சித்த பா.ரஞ்சித்..எப்போவோ பேசியது இப்போது வைரல்
மாநகரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் மாநகரம். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தில், சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா, முனிஷ்காந்த், சார்லி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விமர்சித்த பா.ரஞ்சித்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு கேட்ட வார்த்தை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் சில வருடங்களுக்கு முன் படத்தை விமர்சித்து பேசியுள்ளார்.
இதில் " மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம். ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா. இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது சைக்கலாஜிக்கல் பிரச்சனை. ஏனென்றால், உன் சொல்பேச்சை கேட்ட அடிமைப்பட்டு கிடந்த ஒருவன், சென்னையில் உன்னை அசால்டாக டீல் செய்வது, உனக்கு கோபத்தை தூண்டுகிறது " என்று கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பா. ரஞ்சித் இப்படி பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.