பா.ரஞ்சித் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லையாம்.. வேறு யார் தெரியுமா

pa.ranjith thenpa
By Kathick Sep 24, 2021 11:10 AM GMT
Report

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித்.

இதன்பின் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்க உள்ளார்.

இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார்.

ஆனால் பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் பணிபுரியவில்லை.

இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US