அடுத்து பயோபிக் படத்தை இயக்கப்போகும் பா.இரஞ்சித்.. யாருடையது தெரியுமா?
பா.இரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து இவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.
யாருடையது தெரியுமா?
இந்நிலையில், அடுத்து இரஞ்சித் இயக்கப்போகும் படம் குறித்து தற்போது அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, பயோபிக் படமொன்றை இயக்க இரஞ்சித் தயாராகி வருகிறாராம். அதுவும் இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இது குறித்து பா.இரஞ்சித்தே நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
