பா.ரஞ்சித்தின் அடுத்த படம்.. முன்னணி ஹீரோவுடன் கூட்டணி! கதை இதுதானா?
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்று வருகிறது.
தங்கலான் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் விக்ரம் ஏற்கனவே படவிழாவில் தெரிவித்து இருக்கிறார்.
பா.ரஞ்சித் அடுத்த படம்
பா.ரஞ்சித் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்து இருக்கிறார்.
அந்த ஹீரோ சூர்யா தான் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா ஏற்கனவே வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கிடப்பில் வைத்து இருக்கிறார். அதனால் அவர் பா.ரஞ்சித் உடன் கூட்டணி சேர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு பா.ரஞ்சித்-சூர்யா இருவரும் ஜெர்மன் என்ற படத்திற்காக கூட்டணி சேர இருந்தனர். ஆனால் அந்த படம் சில காரணங்களால் தொடங்கவே இல்லை. தற்போது கூட்டணி சேர்வது அதே கதைக்காகவா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
