சினிமாவுக்கு அந்த நோக்கத்துடன் வரவில்லை.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பா.இரஞ்சித்!
பா.இரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து இவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.
ஓபன் டாக்
இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா.இரஞ்சித் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற முனைப்போடு வந்திருக்கிறோம். நான் இயக்குநராக வரும் போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன்.
ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், மக்கள் எங்களை ஏற்று கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.