என் கனவு உடைந்து, அப்பா பட்ட வேதனை.. இயக்குநர் பா.இரஞ்சித் உருக்கம்!
பா.இரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து இவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.
உருக்கம்!
இந்நிலையில், தற்போது அவரது கனவு குறித்து பா.இரஞ்சித் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " சிறு வயது முதல் எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் நன்றாக படிக்கும் பையன் ஆனால், 12- ம் வகுப்பு படிக்கும்போது சரியான வழி காட்டுதல் இல்லாமல் பெயில் ஆகி விட்டேன்.
நான் நல்ல மார்க் எடுப்பேன் என்று அப்பா மிகவும் எதிர்பார்த்தார். ஆனால், நான் பெயில் ஆகி விட்டது அவரை மிகவும் வருத்தப்பட வைத்தது. அன்று உடைந்த அப்பா பேசிய குரல் இன்னும் நினைவு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இனி ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, ரயில் பயணம் - சென்னை ஒன்று செயலியை அறிமுகப்படுத்த உள்ள முதல்வர் IBC Tamilnadu
