விஜயகாந்த் சாரை வில்லனாக வைத்து கதை எழுதினேன்.. முன்னணி இயக்குனர் உடைத்த ரகசியம்
பா.ரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
கார்த்தி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியானது.
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் திரையிடப்பட்டது.
விஜயகாந்த் வில்லனாக வைத்து கதை
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சித் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில், "நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை எழுத ஆரம்பித்தேன்."
"அப்போது எனக்கு விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும் அதனால் அவரை வில்லனாக கற்பனை செய்து சில கதைகள் எழுதியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
