டேனியா பால்சன் நடித்த ஏடிகே-வின் 'பச்சை' இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியாகிறது
இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட 'பச்சை' இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைடின் நிர்வாக இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ளார்.
ராப்பர் ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் இந்த இசை வீடியோவை இயக்கியுள்ளதோடு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, தமன் மற்றும் டி இமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏடிகே பணியாற்றியுள்ளார்.
அவரது குறிப்பிடத்தக்க சில பாடல்களில் 'ஷோகாளி', 'தள்ளிபோகாதே' மற்றும் 'காரா ஆட்டக்காரா' ஆகியவை அடங்கும். ‘பச்சை’ பாடலை இசையமைத்து பாடியிருப்பவர் பிரியாமாலி. இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
டிக் டாக் பிரபலம் டேனியா பால்சன் இந்த பாடலில் நாயகியாக நடித்துள்ளார். ஏடிகே சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு இளம் பெண் வனப்பகுதிக்குள் ஓடி, புதிய காற்றை சுவாசித்து, அங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது போல இந்த பாடலின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தலைப்புக்கேற்றார் போல் பாடலுக்கான வரிகள் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன, காட்சிகள் கண்ணனுக்கு இனிமையாக அமைந்துள்ளன. வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் தீபன் ராஜ் இந்த இசை வீடியோவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மோகன் ராஜ் நாயர், வீடியோவில் இடம் பெரும் பறவைகள், பூச்சிகள் மற்றும் வனவிலங்குகள் தொடர்புடைய காட்சிகளை படம்பிடிக்க உதவினார். ஸ்பாட்டிஃபை, ஐடியூன்ஸ் மற்றும் சாவ்ன் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் இந்தப் பாடல் வெளியிடப்படும்.
இதை தவிர Youtube.com/rapmachinesworldwide என்கிற ராப் மெஷின்ஸ் வேர்ல்ட்வைடின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் வெளியிடபடும். ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைட் மற்றும் வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோ தயாரித்து ஏடிகே இயக்கிய 'பச்சை' திரைப்படம் டிசம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.