உலகளவில் படையப்பா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சவுந்தர்யா, செந்தில், லட்சுமி, ராதாரவி, கிரேசி மோகன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ரஜினியின் இன்ட்ரோ, ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனம், காதல், நகைச்சுவை, பாடல், செண்டிமெண்ட் என அனைத்திலும் பட்டையை கிளப்பி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது ரஜினியின் படையப்பா.
ரஜினிகாந்திற்கு மட்டுமல்லாமல், ரம்யா கிருஷ்ணன் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் என பலருக்கும் இப்படம் மிகப்பெரிய பெயரை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது.
இந்நிலையில், இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாத இடத்தை பிடித்துள்ள படையப்பா திரைப்படம், உலகளவில் ரூ. 45 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri
