கில்லி வசூலை அடித்து நொறுக்க வரும் படையப்பா.. தமிழ் சினிமாவின் அடுத்த ரீ-ரிலீஸ்
கில்லி
சமீபத்தில் ரீ-ரிலீஸான விஜய்யின் கில்லி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை குவித்தது. புதிய படங்களுக்கு இணையாக இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதை தொடர்ந்து விஜய்யின் மற்ற திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படத்தையும் வெளியிட்ட அப்படத்தை தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம்.
அடுத்த ரீ-ரிலீஸ்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் ஆன இப்படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்யலாம் என அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் முடிவு செய்து, அதுகுறித்து ரஜினியிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம்.

இதற்கான முடிவு விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
இதுமட்டும் நடந்தால் கண்டிப்பாக கில்லி ரீ-ரிலீஸ் வசூலை படையப்பா முறியடிக்கும் என பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu