படையப்பா ரீ ரிலீஸ் ப்ரீ புக்கிங்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
படையப்பா
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று படையப்பா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ப்ரீ புக்கிங்
1999ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான இப்படத்தை 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்துள்ளனர். இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படையப்பா திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3+ கோடி வசூல் செய்துள்ளது. இது ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.