நடிகர் மம்மூட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு உயரிய விருது அறிவிப்பு! குவியும் வாழ்த்து
2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் கலை, இலக்கியம், பொது சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பானவர்களை தேர்வு செய்து பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளில் நடிகர்கள் பலருக்கும் விருதுகள் கிடைத்து இருக்கிறது.

மம்மூட்டி, மாதவன்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. மறைந்த ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவனுக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.

கமல் வாழ்த்து
பத்மபூஷன் விருது வென்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல் வாழ்த்து கூறி இருக்கிறார்.
"என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டி அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்."
"நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு."
"நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. "
இவ்வாறு கமல் பதிவிட்டு இருக்கிறார்.
என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் @mammukka அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’…
— Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2026