ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்
பையா 2
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியானது.
ஆர்யா கதாநாயகனாக நடிக்க போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டது. ஆனால், இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவில்லையாம்.
லேட்டஸ்ட் அப்டேட்
கார்த்தி தான் பையா 2 படத்திலும் கதாநாயகனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகும் என்றும், ஆனால், இதுவரை கதாநாயகியை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? சொம்பு தூக்குறோமா.. CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
