வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென கண்ணீர்விட்டு அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்னானது?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் கொரோனா அதிகரித்து வந்த நேரத்தில் விளம்பரம் செய்யப்பட்ட சீரியல் பாக்கியலட்சுமி.
லாக் டவுன் சமயத்தில் சீரியலின் விளம்பரம் கூட நிறுத்தப்பட்டது. எல்லா பிரச்சனையும் முடிந்தபிறகு இந்த புதிய சீரியலுக்கான புரொமோஷன் தொடங்கி சீரியலும் ஓடியது.
ஆரம்பத்தில் சீரியலுக்கு எந்த வரவேற்பும் இல்லை, பின் நாட்கள் செல்ல செல்ல சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தார்கள். இப்போது விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் இதுவும் இடம்பெற்றுள்ளது.
சீரியலில் அம்மா-மகன் பாசம் அதிகமாக கடந்த சில மாதங்களாக காட்டப்படுகிறது.
எழில் என்கிற வேடத்தில் நடிக்கும் விஷால் சீரியல் படப்பிடிப்பில் வீடியோ லைவ் வந்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்கும் சுசித்ரா அழுகிற காட்சி நடித்துக் கொண்டிருந்தார்.
உடனே லைவ் வீடியோவில் வந்து பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென அழுதுள்ளார். உடனே ரசிகர்கள் அதைப்பார்த்து அடடே லைவ்வில் தத்ரூபமாகவே அழுகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.