திருமணத்திற்கு ஓகே சொல்வாரா பாக்யா.. ஒரு வார்த்தையில் மயங்கிய பழனிச்சாமி! அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் பாக்யா மற்றும் பழனிச்சாமி ஆகியோரின் லவ் ட்ராக்கை தொடங்கி இருக்கிறார்கள்.
திருமணமே வேண்டாம் என இருந்த பழனிச்சாமி தற்போது பாக்யா மீது காதலில் விழ தொடங்கி இருக்கிறார். பிறந்தநாள் பார்ட்டிக்கு சமைத்ததற்காக பாக்யா பணம் வாங்கவில்லை என அம்மா சொல்ல, பழனிச்சாமி உடனே பாக்யாவை சந்தித்து அந்த பணத்தை கொடுக்கலாம் என செல்கிறார்.
அன்பை விலைபேசாதீங்க
ஆனால் பாக்யா அந்த பணத்தை வாங்க மறுக்கிறார். அன்பை விலைபேசாதீங்க என சொல்லி அவர் வேண்டாம் என சொல்கிறார்.
அந்த ஒரு வார்த்தையில் மயங்கிய கோபி, அப்படியே கார் ஒட்டிக்கொண்டு சிக்னலை கூட பார்க்காமல் போகிறார். அவரை துரத்தி வந்து ட்ராபிக் போலீஸ் அபராதம் விதிக்க, 'அன்பை விலை பேசாதீங்க' அவர்களிடம் சொல்கிறார் பழனிச்சாமி.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.