பாண்டவர் பூமி நடிகை ஷமிதாவை நினைவிருக்கா! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. கணவர் சன் டிவி சீரியல் ஹீரோவா?
2001ல் வெளிவந்த பாண்டவர் பூமி படத்தில் நடித்து இருந்தவர் ஷமிதா. அந்த படத்தில் இடம்பெற்ற தோழா தோழா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்காததால் ஷமிதா சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.
சிவசக்தி, வசந்தம், பிள்ளைநிலா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த அவர் சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் விஜய் டிவியின் பொன்னி என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் கடந்த வருடம் அதில் இருந்து விலகிவிட்டார்.
ஸ்ரீகுமார் தற்போது சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தா?
ஷமிதா அவரது கணவர் ஸ்ரீகுமாரை விவாகரத்து செய்து விட்டார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என இருவருமே விளக்கம் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.