ஒன்றாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் செம்பருத்தி சீரியல் நட்சத்திரங்கள், யார் யார் தெரியுமா?
பிரபல சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் செம்பருத்தி.
இந்த இரண்டு சீரியல்களுக்கு ஒரு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெரியளவில் வெற்றியடைந்துள்ளதால் தற்போது அதனை வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரபல செம்பருத்தி சீரியலில் முக்கிய நடிகர் கார்த்திக் ராஜ் விலகியுள்ளதால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா மற்றும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானா இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.
முக்கிய சீரியல்களின் நடிகைகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த செல்பி புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.