நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசன் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாக 2ம் பாகம் அப்பா-மகன்களின் உறவை பற்றிய கதையாக உள்ளது.
இன்றைய எபிசோடில், நடனம் ஆடியே தீருவேன் என சென்னை கிளம்பிய ராஜி அங்கு பிரச்சனையில் சிக்க எப்படியோ கதிர் வந்து காப்பாற்றிவிட்டார்.
இன்று அதிக காட்சிகள் கதிர்-ராஜி மனம் விட்டு பேசுவது தான் இடம்பெற்றுள்ளது.
புரொமோ
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் குமரவேல் நீதிமன்றத்தில் தான் செய்தது மிகப்பெரிய தவறு, என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்.
இதனை கேட்ட அரசி, தப்பு செய்தவர் தப்பை ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைத்தேன், அது நடந்துவிட்டது. இதனால் இந்த வழக்கை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என அரசி கூற குமரவேல் செம ஷாக் ஆகிறார்.