மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் என்றால் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் தான்.
பாண்டியனுக்கு தெரியவந்து லஞ்ச பணத்தை யாருக்காவது உதவி செய்துவிட்டு வீட்டிற்குள் வா என கூற அப்பா சொன்னதை போல் செய்தார் செந்தில். பணத்தை கொடுத்துவிட்டு செந்தில் வர திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வீட்டிற்கு வர சோதனை நடத்தினர்.

பின் செந்தில் வீட்டிற்கும் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர், ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டார். இந்த சம்பவத்தில் மிகவும் பயந்த செந்தில் சத்தியமாக இனி இப்படியொரு காரியத்தை செய்ய மாட்டேன் என்கிறார்.

பிறகு கதிர் தனது மாமனார் முத்துவேலை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்கிறார்.
புரொமோ
செந்தில் லஞ்சம் வாங்கிய கதைக்களம் பரபரப்பாக சென்று இப்போது தான் முடிவுக்கு வந்தது, அதற்குள் இன்னொரு பரபரப்பான கதைக்களம் தொடங்கிவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோவில், முத்துவேல் திடீரென வலியால் துடிக்க அவரை சக்திவேல் மருத்துவமனை அழைத்து செல்ல கிளம்புகிறார்.

அந்த நேரம் வந்த பாண்டியன் மற்றும் கதிர் முத்துவேலை ஏற்கெனவே பார்த்த மருத்துவரிடம் தான் அழைத்து செல்ல வேண்டும் என்கின்றனர்.
கதிர் தனது மாமனாரை அழைத்துச் செல்ல பாண்டியன் குடும்பத்தினரிடம் முத்துவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை கூற அனைவரும் ஷாக் ஆகி கதறி கதறி அழுகிறார்கள். இதோ புரொமோ,
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri