என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் சீசன் முடிவுக்கு வர 2வது சீசன் கடந்த அக்டோபர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் பாசம் என்றால் 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் மக்கள் தொடருக்கு பெரிய ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் இப்போது டிஆர்பியில் சூடு பிடித்துள்ளது.
புரொமோ
தற்போது கதையில் ராஜி தனது திருமணம் எப்படி நடந்தது என்ற விஷயத்தை கூறிவிடுகிறார்.
இதனால் அவரது அம்மா-அப்பா மகளை தனது வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்ய ராஜி வர முடியாது என கூறிவிட்டார். இன்னொரு பக்கம் மயில் கர்ப்பமாக இருப்பதால் கொண்டாட்டம் நடக்கிறது.
இந்த வார புரொமோவில் மயில் மருத்துவமனைக்கு கர்ப்பமாக இருப்பதால் செக்கப்பிற்கு செல்கிறார். ஆனால் அங்கு மருத்துவர் அவர் கர்ப்பமாக இல்லை என கூற சரவணன் உடைந்துபோகிறார்.
ஏமாற்றுவதை குடும்பமே பழக்கமாக வைத்துள்ளீர்கள், இதில் கூடவா பொய் சொல்வீர்கள் என கோபப்படுகிறார்.