மீண்டும் சரவணனை பார்க்க போன மயில்.. அங்கு நடந்த சம்பவம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் பற்றிய பிரச்சனை தான் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. வரதட்சணையாக கொடுத்த 80 சவரனில் 8 சவரன் மட்டும் தான் உண்மை, மீதம் எல்லாமே கவரின் எங்கிற உண்மையை மயில் போலீஸ் ஸ்டேஷனில் கூறியதால் தான் பாண்டியன் குடும்பம் கைதில் இருந்து தப்பித்தது. இருப்பினும் அவர் மீதான வெறுப்பு எல்லோருக்கும் அதிகமாகி தான் இருக்கிறது.
வீட்டில் மயில் இருந்ததற்கான ஒரு அடையாளம் கூட இருக்க கூடாது என சொல்லி மயிலின் மொத்த பொருட்களையும் எடுத்து வண்டியில் ஏற்றி மயில் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கெஞ்சும் மயில்
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் வண்டியில் வந்த பொருட்களை பார்த்து மயில் அதிர்ச்சி ஆகிறார். அதன் பின் மாமியார் உள்ளிட்ட எல்லோருக்கும் போன் செய்கிறார். ஆனால் யாரும் போனை எடுக்காமல் அவர் நம்பரை பிளாக் செய்கின்றனர்.
அதன் பின் மயில் நேராக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு செல்கிறார். அங்கு இருக்கும் சரவணனிடம் அவர் பேச அவர் கோபத்தில் அடிக்க போகிறார். அப்போது அங்கு வரும் பாண்டியன் மகனை தடுத்து நிறுத்துகிறார்.
எதுவாக இருந்தாலும் கோர்ட் மூலமாக பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி பாண்டியனும் மயிலை அங்கிருந்து போக சொல்கிறார். ப்ரோமோவை பாருங்க.