மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒரு தொடராக அமைந்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட பாண்டியன்-கோமதியின் வாழ்க்கை கதையாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்து வருகிறது. கடைசியாக கதையில் பாண்டியன் குடும்பத்திற்கு மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வர அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

இன்னொரு பக்கம் கதிர் முத்துவேலை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியாக இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை சக்திவேல் பார்த்ததால் அவர் சந்தேகப்பட தொடங்குகிறார்.
புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அஞ்சலியை கோவிலில் சந்திக்கிறார் சரவணன்.
இந்த குழந்தையை காரணம் காட்டி அவர்களுடன் வாழ சொல்லி கேட்பார்கள் என அஞ்சலி கூற, அந்த குழந்தையை சந்தோஷமாக என் குழந்தையாக வளர்ப்பேன், ஆனால் அவளுடன் மட்டும் வாழவே மாட்டேன் என்கிறார் சரவணன்.

அதோடு அஞ்சலியிடம் நான் உன்னை திருமணம் செய்வேன் என சத்தியம் செய்கிறார். அதோடு மயிலை வீட்டில் சந்தித்த கோமதி, என் மகன் செய்தது தவறு தான் மன்னித்துவிடு என்கிறார்.
உன் வயிற்றில் வளர்வது எங்கள் வீட்டு வாரிசு, உன்னையும் குழந்தையையும் அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டோம் என்கிறார்.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri