பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த அந்த கதைக்களம் வந்துவிட்டது.
அதாவது பொய்யாக கூறி திருமணம் செய்துவந்த மயில் பற்றிய உண்மைகள் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க இப்போது நடந்துவிட்டது. பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மயில் பற்றிய உண்மை தெரியவர அவரை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள்.

ஆனால் மயில் இதுதான் என் வீடு என மீண்டும் வீட்டிற்கு வர சரவணன் விவாகரத்து வேண்டும் கொடுத்துவிடு என கூறி அனுப்புகிறார். ஆனால் மயில் அம்மா எப்படி விவாகரத்து பெறுகிறீர்கள் என்பதை நானும் பார்க்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் சரவணன் மயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார், அதைப்பார்த்து மயில் ஷாக் ஆகிறார். உடனே மயில் அப்பா-அம்மா போலீஸ் நிலையம் சென்று பாண்டியன் குடும்பத்தினர் அனைவரின் மீது வரதட்சணை கொடுமை புகார் அளிக்கிறார்.
இதனால் பாண்டியன், கோமதி, ராஜி, அரசி என அனைவரும் கைதாகிறார்கள். இதோ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் பரபரப்பு புரொமோ,
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri