புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
முதலில் அண்ணன்-தம்பிகளை மையமாக கொண்டு முதல் பாகம் ஒளிபரப்பாக 2ம் பாகம் அப்பா மகன்களை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
செந்தில் அரசு வேலை கிடைத்ததால் கடை வேலையை சரவணன் தனது அப்பாவுக்கு உதவியாக செய்து வருகிறார். கதிர் டிராவல்ஸ் வைக்க பணத்திற்காக போராடி அட அவருக்கு உதவ ராஜி ஒரு வேலை செய்யப்போய் பிரச்சனையில் சிக்கி பின் தப்பித்தார்.
செந்தில் வேலை வாங்க லோன் வாங்கியது, கதிருக்கு டிராவல்ஸ் வாங்க பணம் வேண்டியிருப்பது என யோசித்த பாண்டியன் நிலைத்து விற்று தனது மகன்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.
புரொமோ
இந்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கதிரின் புதிய டிராவல்ஸ் திறப்பு விழா காட்சிகள் இடம்பெறுகின்றன.
டிராவல்ஸ்க்கு யார் பெயர் என அனைவரும் ஆவலுடன் பார்க்க பாண்டியன் டிராவல்ஸ் என பெயர் வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கதிர். இதோ புரொமோ,