காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர் பாண்டியன் கோமதி தம்பதி.
இந்த விஷயத்தில் உடனே எந்த முடிவும் எடுக்க முடியாது என யோசித்து பாண்டியன் முதலில் மயிலை நேரில் சந்தித்து ஆறுதலாக பேசு என்று கூறியிருந்தார், கோமதியும் மயிலை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கு அமைதியாக மயிலிடம் பேச சென்ற கோமதியை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தார் பாக்கியம், ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை.

சரவணன் கடையில் தனது அப்பாவிடம், என் குழந்தையை நான் கண்டிப்பாக பார்த்துக் கொள்வேன்.
ஆனால் மீண்டும் என்னை மயிலுடன் மட்டும் சேர்ந்து வாழ சொல்லாதீர்கள், பின் யாருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்காது என்கிறார்.
புரொமோ
இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ வெளியாகிறது. அதில் முத்துவேல் தனக்கான மருத்துவ வேலைகள் ஆரம்பிக்கும் முன் அம்மாவுடன் இருக்க ஆசைப்படுவதாக கூறுகிறார்.

அதற்கு ஏற்றார் போல் வீட்டில், பாண்டியன் காந்திமதியை பார்த்து ஏன் இரவு எல்லாம் நன்றாக தூங்கவில்லையா என கேட்கிறார். அதற்கு காந்திமதி மிகவும் சூடாக இருந்தது என கூற கோமதி ஏசி போட்டுடலாம் என்கிறார்.
உடனே கதிர் எதற்கு வீணாக ஏசி எல்லாம் போட்டுக்கொண்டு, ஏசி இருக்கும் வீட்டிற்கே செல்வது தானே சரியாக இருக்கும் என்கிறார். அதைக்கேட்டு எல்லோரும் ஷாக் ஆக காந்திமதி என்ன கோமதி வீட்டைவிட்டு வெளியே போ என்பது போல் பேசுகிறான் என்கிறார்.

ஆனால் கதிர் இந்த வீட்டில் வசதி இல்லை என நினைப்பவர் இந்த வீட்டில் இருக்க வேண்டாம், அம்மாச்சி அவர் வீட்டிற்கே போகட்டும் என கோபமாக கூறுகிறார்.
இதோ அந்த புதிய புரொமோ,