ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பங்கள் கொண்டாடும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.
2வது சீசன் அப்பா-மகன்களின் கதைக்களமாக அமைந்துள்ளது. இப்போது கதையில் பாண்டியன் தனது நிலைத்தை விற்று செந்தில் லோன் போட்டு வாங்கிய கடனை அடைக்க பணம் கொடுத்தார்.
அதேபோல் கதிர் டிராவல்ஸ் ஆரம்பிக்கவும் பணம் கொடுத்தார், அந்த பணத்தை வைத்து தனது தந்தை பெயரில் டிராவல்ஸ் திறந்து அனைவரையும் சந்தோஷப்படுத்திவிட்டார். இந்த வாரம் ஆரம்பித்த நாள் முதல் டிராவல்ஸ் காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளன.
புரொமோ
தற்போது சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாண்டியன் கடைக்கு பொருள் வாங்க பணம் இருக்கிறதா என கோமதியிடம் கேட்க அவர் குறைவாக உள்ளது என்கிறார்.
அப்போது மீனா என்னிடம் நீங்கள் கொடுத்த ரூ. 10 லட்சம் அப்படியே உள்ளது என கூற பாண்டியன் அவர்களின் லோனை முதலில் அடைக்க கூறுகிறார்.
இதனை கேட்ட செந்தில் அறைக்கு வந்து அந்த பணத்தை வைத்து நான் புதியதாக செல்ல இருக்கும் வீட்டிற்கு கட்டில் எல்லாம் வாங்க உள்ளேன் என கூறுகிறார். இதனால் கோபப்பட்ட மீனா நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் நான் இங்கே தான் இருப்பேன் என்கிறார்.