மீனா கேட்ட எதிர்ப்பாராத கேள்வி, ஷாக்கில் நின்ற சரவணன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் அழகை காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக சீரியல் ஒளிபரப்பாக இந்த வாரம் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
மயில் தனது அம்மாவும் மோசமாக பேச பணம் இருந்தால் தன் வாழ்க்கை தானே பார்த்துக் கொள்ளலாம் என மீனாவிடம் ஒரு வேலை கேட்க பின் அவருக்கு தெரிந்தவரின் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.

அங்கு முதலில் பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலையில் மட்டும் சேர ரூ. 10,000 சம்பளம் பேசினார்கள். சமையலுக்கும் இப்போது மயில் ஓகே சொல்ல ரூ. 17, 000 ஆயிரம் சம்பளம் வாங்க இருக்கிறார்.
அந்த விஷயத்தை மீனாவிடம் கூறி சந்தோஷமும் பட்டார்.

புரொமோ
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், மீனாவை கோவிலுக்கு வரச் சொல்லி மயில் சம்பள உயர்வு விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் சரவணனுடன் இதற்கு முன் மீனா பார்த்த பெண் கோவிலுக்கு வருகிறார்.

அவரது பின்னாலேயே சரவணனும் வர மயில் அவர்களை பார்த்து விட கூடாது என கூறி அவரை கோவிலில் இருந்து வெளியே அழைத்து வந்துவிடுகிறார்.
பின் வீட்டிற்கு வந்த மீனா சரவணனிடம் கோவிலில் உங்களுடன் இருந்த பெண் யார் என கேட்கிறார், அதற்கு அவர் கூறப்போகிறாரோ பொறுத்திருந்து காண்போம். இதோ புரொமோ,