கறி சோறு போடுவதாக ஏமாந்த சக்திவேல், பாண்டியன் தரமான சம்பவம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது ஒளிபரப்பாகும் கதைக்களம் என்னவென்றால் அது காந்திமதியின் பிறந்தநாள் தான்.
அவரது 75வது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என சக்திவேல் குடும்பம் முடிவு செய்து பெரிய ஏற்பாடுகள் செய்கின்றனர்.
இன்னொரு பக்கம் கோமதியும் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என பாண்டியனிடம் கேட்ட அவரும் சில ஏற்பாடுகள் செய்கிறார்.

புரொமோ
கடந்த வார எபிசோடில், காந்திமதியின் பிறந்தநாளுக்கு சக்திவேல் குடும்பம் கொண்டாடினார்கள். அங்கு வந்த கோமதி குடும்பமும் காந்திமதியுடன் புகைப்படம் எடுத்து அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசுகள் கொடுத்துள்ளனர்.

இந்த வாரத்திற்கான புரொமோவில், காந்திமதி பிறந்தநாளுக்கு சக்திவேல் குடும்பம் கறிவிருந்து ஏற்பாடு செய்தார்கள், ஆனால் கடைசி வரை சாப்பாடு வரவில்லை.

ஆனால் பாண்டியன் ஏற்பாடு செய்த சாப்பாடு வர அனைவரும் அவரது விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டு சென்றனர். பாண்டியன் முன் அசிங்கப்படுத்தி விட்டாய் என குமரவேலை பளார் விடுகிறார் முத்துவேல்.
இதோ இந்த வாரத்திற்கான புரொமோ,