சரவணன்-மயில் விவாகரத்து வழக்கு, நீதிபதி எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கதையில் இப்போது அரசிற்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்ய அதை கெடுக்கும் வகையில் குமார் ஒரு வேலையை செய்துவிட்டார்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்கும் அரசிக்கும் திருமணம் நடந்தது, என்னுடன் வாழ்ந்தால் என கூற அவர்கள் இந்த பெண் வேண்டாம் என சென்றுவிட்டனர்.

இந்த ஆத்திரத்தில் அரசி அண்ணன்கள் அவரை செமயாக அடித்தார்கள். அப்போதும் திருந்தாக குமார் மீண்டும் வழியில் அரசியை பார்த்து வம்பிழுத்துள்ளார். அந்த நேரம் அங்கு வந்த கதிர்-செந்தில் அவரை மீண்டும் அடி அடியென அடித்து வெளுத்துள்ளார்கள்.

புரொமோ
கடந்த 2 நாட்களாக அரசி பிரச்சனை சென்றுகொண்டிருக்க தற்போது மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை வந்துள்ளது. புரொமோவில் நீதிமன்றத்தில் நீதிபதி உங்கள் விவாகரத்து முடிவில் எந்த மாற்றமும் இல்லையா என கேட்க இருவரும் இல்லை என்கிறார்கள்.

பின் மயிலை தனியாக அழைத்து பேசிய நீதிபதி, ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது மிகவும் கஷ்டம், உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார்.
ஆனால் மயில் எனக்கு அவர்களிடம் இருந்து எதுவும் வேண்டாம் என கூற நீதிபதி அவரை முடிவை தெரிவிக்கிறார்.
இதோ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ,
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri