மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் மயில் சொன்ன பொய் எல்லாம் வெளியே வர பாண்டியன் குடும்பத்தினர் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். தனது வாழ்க்கை போச்சே என மயில் புலம்பிய படி இருக்கும் நேரத்தில் திடீரென சரவணன் விவாகரத்த நோட்டீஸ் அனுப்பிவிடுகிறார்.
அதைப்பார்த்து மயில் கதற அவரது அம்மா வழக்கம் போல் போலீஸ் நிலையம் சென்று பாண்டியன் குடும்பத்தினர் மீது பொய் புகார் அளிக்கிறார்.

புரொமோ
மீனாவை தவிர எல்லோரையும் போலீஸ் கைது செய்துவிட்டனர். தற்போது என்னவென்றால் மயிலிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில், கதிர் ஆகியோரை ஜெயிலில் அடைக்க முடிவு செய்கிறார்கள்.

மீனா இதுகுறித்து மயில் அம்மாவிடம் பேச அவர் புகார் திரும்ப பெற முடியாது என கராராக கூறுகிறார்.
அரசி, ராஜி, மீனா தவிர பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில், கதிர் 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள். இதோ பரபரப்பான புரொமோ,
புத்தாண்டு ராசிபலன்.., நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு, சிம்மத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri