திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, கூட்டுக் குடும்பம் என்றால் என்னவென்று மறந்திருக்கும் இந்த காலத்தினருக்கு எடுத்துரைக்கும் ஒரு தொடராக உள்ளது.
இன்றைய எபிசோடில், செந்தில் மீனாவை தேடி பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். மீனாவை பார்த்த செந்தில் அறைக்கு அழைத்து சென்று இங்கே என் வந்தாய் என கேட்கிறார்.

அதற்கு அவர் டிரஸ் Iron செய்யனும், காய்கறி வாங்கிட்டு வந்து சமைக்கனும் என வேலை கொடுத்தால் நானே ஆபிஸில் இருந்து அசதியாக வந்தேன் என்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கோமதி வந்த செந்திலை திட்டி அனுப்புகிறார்.
பின் செந்தில் தனது அண்ணன், தம்பி, மாமா தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார். மீனா பாண்டியன் வீட்டில் ஜாலியாக இருக்கிறார்.

புரொமோ
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுகன்யாவின் அம்மா வீட்டில் இருந்து சீர் வருகிறது, அதைப்பார்த்து ராஜி வருத்தப்பட கோமதியும் வருத்தப்படுகிறார்.

அதைப்பார்த்த அவரது தம்பி பழனி வெற்றிலை, பாக்கு, பழங்கள், ஆடைகள் வைத்து கோமதிக்கு சீர் கொடுக்க ஆனந்த கண்ணீரில் அவரை கட்டியணைக்கிறார்.