லஞ்சம் வாங்கிய செந்திலை அடித்து வெளுத்து பாண்டியன் போட்ட கண்டிஷன்...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகிறது.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் வேறு புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது. இன்றைய எபிசோடில், சோகமாக இருக்கும் மீனாவை என்ன விஷயம் நடந்தது என கோமதி கேட்கிறார்.

முதலில் சொல்ல தயங்கிய மீனா பின் நடந்த விஷயம் மொத்தத்தையும் கூறுகிறார், தனது மகன் லஞ்சம் வாங்கிய விஷயம் கேள்விப்பட்ட கோமதி செம ஷாக் ஆகிறார்.
இன்னொரு பக்கம் மயில் வீட்டில் இந்த திருமணம் வேண்டாம் என தனது அம்மா-அப்பாவிடம் சண்டை போட சுடர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்கின்றனர். அதைக்கேட்ட மயில் செம ஷாக் ஆகிறார், தனது தங்கையிடம் திருமணம் வேண்டாம் என கெஞ்சுகிறார்.

புரொமோ
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோவில், பாண்டியனுக்கு செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயம் தெரிய அவரை அடித்து வெளுக்கிறார்.

பின் லஞ்சம் வாங்கினால் இருக்கும் பணம் இரண்டு மடங்காக காணாமல் போகும், என்ன பழக்கம் என கோபமடைகிறார். கடைசியாக இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் வாங்கி லஞ்சப் பணத்தை நல்லதிற்கு செலவு செய்துவிட்டு வா இல்லையென்றால் வீட்டுப் பக்கம் வராதே என்கிறார்.