முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
மகா சங்கமம்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது.
இதில் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் குடும்பமாக அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு கதை ஜாலியாக அமைந்தது. தற்போது கோமதி குடும்பத்தினர் தங்களது ஊருக்கே வந்துவிட்டனர்.
காரணம் சக்திவேல், தனது அண்ணனை உன் மகன் கதிர் கடத்திவிட்டான் என பாண்டியனிடம் சண்டை போட ஒரு பெரிய பிரச்சனையாக வெடித்தது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், முத்துவேல்-கதிர் வர இன்னொரு பக்கம் கோமதி, மீனா, ராஜியை அழைத்துக்கொண்டு சுரேஷ்-அழகு மதி வருகிறார்கள். கதிரை முத்தவேலுடன் பார்த்ததும் சக்திவேல் சட்டையை பிடித்து மிகவும் சண்டை போடுகிறார்.

அந்த இடத்தில் கதிர் உங்கள் அண்ணன் வந்துவிட்டார், பிறகு என்ன என கேட்க அவர் விடுவது போல் தெரியவில்லை. சண்டை முற்றிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் சுரேஷ், கதிரை சந்திக்கிறார்.
கதிர் சென்னையில் பார்த்ததையும் அவர் கூறியதும் நியாபகம் வர பாண்டியனை வீட்டிற்குள் அழைத்துச்சென்று முத்துவேலுக்கு புற்றுநோய் என்ற விஷயத்தை கூறுகிறார்.

அதைக்கேட்டதும் பாண்டியன் செம ஷாக் ஆகிறார், பின் பிரச்சனையை சமாளிக்க வெளியே வந்து இப்போது என்னயா, அதான் உன் அண்ணன் வந்துவிட்டார் ல. அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்ற என்ன என்று கேள் என சமாளிக்கிறார்.
பின் முத்துவேல் தனது குடும்பத்தினரிடம் ஹெர்னியா ஆபரேஷன் நடந்தது என கூறி சமாளிக்கிறார்.