நான் சாகும்வரைக்கும் இந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேராது! வருத்தத்தில் காந்திமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியனுக்கு தெரியாமல் பழனி தனியாக காந்திமதி ஸ்டோர்ஸ் ஆரம்பித்தது பெரிய பிரச்சனையை குடும்பத்தில் ஏற்படுத்தியது. இதனால் பழனியை வீட்டை விட்டு வெளியேற சொன்னார் பாண்டியன்.

புதிய புரோமோ
இந்த நிலையில், தற்போது பழனி புதிதாக கடை திறந்திருப்பதை அறிந்து, அங்கு கதிர் செல்கிறார். அப்போது அங்கு வரும் குமாருக்கும், கடையில் உள்ள கதிருக்கும் சண்டை வருகிறது. இதில் குமார் கதிரை அடித்துவிடுகிறார்.

இதை வீடியோ எடுக்கும் சுகன்யா அந்த வீடியோவை, கதிரின் மனைவி ராஜிக்கு அனுப்பி வைக்கிறார். என் கணவரை அடித்துவிட்டாயா என குமாருடன் சண்டை போடுகிறார் ராஜி.

இப்படி இரு குடும்பத்தினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை வந்துகொண்டு இருக்க, "நான் சாகும்வரைக்கும் இந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேராது" என விரக்தியில் கூறுகிறார் காந்திமதி. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan