பெரிய வம்பில் மாட்டபோகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புது ப்ரோமோவை பாருங்க
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் துளசியை கடத்தியதற்காக எதிர்வீட்டு குமரவேல் மீது போலிஸில் புகார் அளிக்கின்றனர். அதனால் போலீஸ் வந்து அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
அதனால் சக்திவேல் வந்து பாண்டியனிடம் ரோட்டில் சண்டை போடுகிறார். அப்போது கதிர் அங்கே வந்து அப்பா பாண்டியனுக்கு ஆதரவாக நிற்கிறார்.
புது ப்ரோமோ
பிள்ளை எப்படி வளர்க்க வேண்டும் என தன்னை பார்த்து கற்றுக்கொள்ளும்படி பாண்டியன் சக்திவேலை 2 அவமானப்படுத்திவிட்டு கிளம்புகிறார்.
அதன் பிறகு பாண்டியன் மற்றும் கதிர் இருவரும் வங்கிக்கு சென்று லோன் விஷயமாக பேசுகின்றனர். அவர்களும் டாக்குமெண்ட் கொண்டு வாங்க என அனுப்புகிறார்கள்.
எங்கு கையெழுத்து போட சொன்னாலும் போட்டுடு, லோன் வாங்கி தொழில் பண்ணு என பாண்டியன் கூறுகிறார். கேரண்டி கையெழுத்து போடும் பாண்டியனுக்கு இதுவே பின்னால் பெரிய பிரச்சனையை கொண்டுவரும் என தெரிகிறது.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu
