பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தனது பெண்ணின் திருமணம் நடக்க வேண்டும் என மயில் அம்மா இல்லாத பொய்களை அடுக்கி திருமணம் செய்து வைத்தார். அந்த பொய்கள் அனைத்தையும் சரவணன் கண்டுபிடித்து வீட்டில் கூற மயிலை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர்.

தனது மகள் வீட்டில் இருந்தால் என்ன ஆவது என மீண்டும் பொய்களை அடுக்கி மயில் அம்மா பாண்டியன் குடும்பம் மீது போலீஸில் புகார் அளித்தார். ஆனால் எப்படியோ பாண்டியன் குடும்பத்தினர் கோமதி அண்ணன்கள் வாக்குமூலத்தால் வெளியே வந்துவிட்டனர்.
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பத்தின் எமோஷ்னல் காட்சிகள் தான் ஒளிபரப்பானது.
சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
படப்பிடிப்பு
அடுத்து கதையில் என்ன நடக்கும், மயில் குடும்பம் என்ன செய்யப்போகிறது, பாண்டியன் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் அப்பாவாக நடிக்கும் சைவம் ரவி தனது இன்ஸ்டாவில் ஒரு படப்பிடிப்பு தள போட்டோ வெளியிட்டுள்ளார். அதில் மயில் அம்மா ஜெயிலில் அடைக்கப்பட்டது போன்ற புகைப்படம் அமைந்துள்ளது.