பல்பு வாங்கிய கோமதி.. இது தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி தான் ராஜி மற்றும் கதிருக்கு திருமணம் செய்து வைத்தார் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரியவந்துவிட்டது. அதை கேட்டு பாண்டியன் கடும் அதிர்ச்சி ஆகிறார். இவ்வளவு பெரிய உண்மையை தன்னிடம் மறைத்துவிட்டதாக கோமதி மீது கோபமாக பேசுகிறார்.
மேலும் இனி கோமதி தன்னிடம் பேசவே கூடாது என்றும் சொல்லிவிடுகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோமதி கணவர் பாண்டியனிடம் பேச பல முயற்சிகள் செய்கிறார்.
முதலில் அவர் காய்ச்சலில் கஷ்டப்படுவது போல நடிக்கிறார். ஆனால் பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கடைக்கு கிளம்பி சென்றுவிடுகிறார். லவ் லெட்டர் எழுதி கொடுக்கலாம் என மீனா ஐடியா கொடுக்க கோமதி லெட்டர் எழுதி கடைக்கு சென்று கொடுக்கிறார்.
பாண்டியன் அதை படிக்காமல், கடைக்கு வந்து முட்டை கேட்ட பெண்ணுக்கு அந்த பேப்பரில் மடித்து கொடுத்துவிடுகிறார். பல்பு வாங்கிய கோமதி மற்றும் மீனா இருவரும் அந்த பெண் பின்னால் ஓடுகின்றனர். ப்ரோமோவை பாருங்க.
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan