வெட்கமே இல்லையா.. கடையில் காசு திருடும் மயில் அப்பா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது தங்கமயிலின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தது தான் பிரச்சனையை தொடங்கி இருக்கிறது.
உங்க அப்பாவை கடைக்கு வர வேண்டாம் என்று தானே சொன்னேன், எதற்கு வந்தார்?. அவர் என்னமோ கடை முதலாளி போல கல்லாவில் தான் உட்காருவாரா என சரவணன் கடும் கோபமாக கேட்கிறார். மேலும் அவர் காசு திருடுகிறாரா எனவும் கேட்கிறார்.
மேலும் அவர் கடையில் இருந்து தனது வீட்டுக்கு மளிகை பொருட்களை எடுத்து சென்றதும் சரவணனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் கடையில் இருக்கும்போதே மயில் அங்கு வருகிறார். அவர் அப்பா அவரை கூட்டி சென்று கடை கல்லாவில் உட்கார வைக்கிறார்.
இது சரவணனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை மேலும் பெரிய சிக்கலை கொண்டு வரும் என தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.