பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பாண்டியன் குடும்பத்தை காப்பாற்ற வந்தது யார் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலின் அம்மா கொடுத்த பொய் புகாரில் தற்போது பாண்டியனின் மொத்த குடும்பத்தையும் போலீசார் கைது செய்து ஸ்டேஷனில் வைத்து இருக்கின்றனர்.
வரதட்சணை புகாரில் கைது செய்யப்பட்ட குடும்பத்தை காப்பாற்ற எதிர்பார்க்காத இருவர் தற்போது வந்திருக்கின்றனர்.

அடுத்த வார ப்ரோமோ
பாண்டியன் குடும்பத்திற்கு எதிரிகளாக இருக்கும் சக்திவேல் மற்றும் முத்துவேல் தான் ஸ்டேஷனுக்கு வந்து அவர்களுக்காக பேசுகின்றனர்.
அப்பாவை பார்த்ததும் ராஜி அழுதுகொண்டே போகிறார், மேலும் சக்திவேலிடம் அண்ணன் என்ற உரிமையுடன் பேசுகிறார் கோமதி. அதை பார்த்து பாண்டியனுக்கு பெரிய அதிர்ச்சி ஆகிறது.
முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் சேர்ந்து பாண்டியன் குடும்பத்தை காப்பாற்ற போகிறார்களா. ப்ரோமோவை பாருங்க.