வயதை உளறிய மயில்.. சரவணன் உச்சகட்ட அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில் பல பொய்களை சொல்லி சரவணனை திருமணம் செய்து கொண்டிருக்கும் தங்கமயிலு தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் வகையில் கதை நகர்ந்து வருகிறது.
ஏற்கனவே அவர் படிக்காதவர், காலேஜ் பக்கமே போகாதவர் என்கிற உண்மை சரவணனுக்கு தெரியவந்து அவர்களுக்குள் பெரிய பிரச்சனை நடந்த நிலையில் தற்போது அடுத்த உண்மையும் அவருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

அடுத்த வார ப்ரோமோ
அடுத்த வார ப்ரோமோவில் மயில் தான் 2010ல் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என எதேச்சையாக எல்லோரிடமும் கூறிவிடுகிறார். அதனால் அவருக்கு வயது 30ஆ என மீனா கேட்கிறார். அது சரவணனுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆதார் கார்டு பற்றி கேட்க மயிலு எதோ சொல்லி சமாளிக்கிறார். அதன் பின் சரவணன் நேராக மயில் அப்பாவிடம் சென்று அவரிடம் ஆதார் கார்டை வாங்குகிறார். அதை பார்த்து அவருக்கு உச்சகட்ட அதிர்ச்சி.
தன் மனைவி மயில் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதை அறிந்து அவர் ஷாக் ஆகிறார். ப்ரோமோவை பாருங்க.