அஞ்சலிக்காக துணை நிற்கும் சரவணன், திடீரென மயில் எடுத்த அதிரடி முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்னயா இது இப்படியோ போனால் எப்படி என்பது போல் சில விஷயங்கள் இழுத்துக்கொண்டே செல்கிறது.
சரவணன்-அஞ்சலி விஷயம், செந்தில் வேலை பிரச்சனை, இரு குடும்பங்கள் சேரும் பிரச்சனை என இந்த விஷயங்களையே கடந்த சில வாரங்கள் காட்டுகின்றனர். ஆனால் ஒரு விஷயத்திற்கு முடிவு என்பது காணவில்லை.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சரவணன் அஞ்சலியை நான் விடமாட்டேன், அவள் நன்றாக இருக்க வேண்டும் என பழனிவேல் மற்றும் செந்திலிடம் கூறுகிறார்.

அதைக்கேட்ட மயில் சரவணனிடம் ஏன் இப்படி அஞ்சலி என இருக்கிறீர்கள், குழந்தைக்காக யோசிக்கலாமே என கேட்கிறார். அதைக்கேட்டதும் சரவணன், நான் குழந்தையை பார்த்துக்கொள்ள மாட்டேன் என கூறவே இல்லையே.
குழந்தையும் வேண்டும், அஞ்சலியும் வேண்டும், ஆனால் நீ மட்டும் எனக்கு வேண்டாம் என கூறுகிறார்.

புரொமோ
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், மயில் சரவணனிடம் பேசிப்பார்த்தார், அவர் அஞ்சலி விஷயத்தில் உறுதியாக இருப்பது தெரிகிறது.

எனவே மயில் அதிரடியாக அஞ்சலி வீட்டிற்கு செல்கிறார், அவரிடம் எங்களுக்கு குழந்தை உள்ளது, யோசிங்கள் என பேசுகிறார். இதனை அஞ்சலி ஏற்பாரா அல்லது அடுத்த பிரச்சனை வருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri