நான் தான் முதலில் காதலை கூறினேன், பிறகு... தனது திருமணம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதைக்களம் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் பழனிவேலை பாண்டியனிடம் இருந்து பிரிக்க இதுதான் ஒரே வழி என அவரது கடை வீதியிலேயே தனது தம்பிக்கு மளிகை கடை வைத்து கொடுக்கிறார்கள்.
வெகுளியாக இருந்த பழனிவேல் இப்போது பாண்டியன்-அண்ணன்கள் இடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்.
பழனிவேல் துரோகம் செய்துவிட்டார் என பாண்டியன்-கோமதி அவர் மீது செம கோபத்தில் உள்ளனர். அடுத்து என்ன கதைக்களம் வரும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

நடிகை பேட்டி
இந்த தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகியாக வலம் வருபவர் நடிகை ஷாலினி. இவர் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷாலினி பேசும்போது, என்னுடைய கணவர் பிரபுவும் இன்ஜினியரிங் தான். ஆனால் கிடைத்த வேலையை விட்டுட்டு அவருக்குப் பிடித்த நடனத்தை பலருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.
கல்லூரி படிக்கும் போது அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள சென்றபோது தான் முதன்முதலில் சந்தித்தேன். அவருடன் பழகும்போது அவரிடம் இருந்த பல குணங்கள் பிடித்ததால் நானே அவரிடம் சென்று காதலை கூறினேன்.

பிறகு இரண்டு வீட்டிலும் நானே பேசி எங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினேன் என கூறியுள்ளார்.