ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை

By Yathrika Mar 20, 2026 12:00 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே நிஜ வாழ்க்கையில் பெரிய ஹீரோ இல்லை. அதேபோல் சீரியல்களில் வில்லன், வில்லியாக நடிப்பவர்கள் நிஜத்தின் வில்லனும் இல்லை.

அப்படி பல சீரியல்களில் வில்லியாக கொடூரமான நபரா நடித்து வந்தவர் தான் கௌதமி வேம்பு நாதன். இவர் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலின் அம்மாவாக பாக்கியம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மயிலின் வாழ்க்கை இவரது வாயாலயே கெடுகிறது என்று தான் கூற வேண்டும்.

ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை | Pandian Stores 2 Serial Actress Emotional Story

கௌதமி பேட்டி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வில்லியாக நடிக்கும் கௌதமி தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான விஷயம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், ஒரு வருடத்திற்கு முன்பு படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த நேரம். காலையில் கௌதமி படப்பிடிப்பு செல்லும் போது அவரது கணவர் நன்றாக தான் இருந்துள்ளார், ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை | Pandian Stores 2 Serial Actress Emotional Story

ஆனால் திடீரென உடல்நல பிரச்சனை ஏற்பட மருத்துவர்கள் உங்க கணவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளது உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். கணவனின் உயிர் இன்னொரு பக்கம் வேலை பொறுப்பு என்ற சூழ்நிலையாம்.

அந்த நேரம் அவரது மருமகள் உறுதுணையாக இருந்தாராம், நான் பார்த்துக்கொள்கிறேன் என முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டாராம், மருமகள் கிடைத்தது எனக்கு பெரிய வரம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை | Pandian Stores 2 Serial Actress Emotional Story

படப்பிடிப்பு போகாமல் நின்றால் தயாரிப்பு மற்றும் சீரியல் குழுவிற்கு நஷ்டம் என படப்பிடிப்பிற்கு சென்று நடிக்க அதேநேரம் அவரின் கணவருக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது. 48 நாட்கள் உயிருக்கு போராடிய அவரது கணவர் இறுதியில் உயிரிழந்தார் என மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US