தங்கப் பதக்கம் வென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்... குவியும் பாராட்டு, யாரு பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
மயில் திருமணம் செய்ய சொன்ன பொய்கள் அனைத்தும் பாண்டியனுக்கு தெரிய வந்ததால் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார், உடனே சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் மயில் அம்மா விவாகரத்து நோட்டீஸ் வந்த வேகத்தில் மகளிர் போலீஸ் நிலையம் சென்று பாண்டியன் குடும்பத்தினர் மீது பொய் புகார் அளிக்க கதைக்களம் விறுவிறுப்பாக சென்றது. எப்படியோ கோமதியின் அண்ணன்கள் பாண்டியனுக்கு ஆதரவாக பேசியதால் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர்.
கோலாகலமாக முடிந்த விஜய்-காவேரி வளைகாப்பு, குமரன் என்ட்ரியா?... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ
சரவணன் இனி மயில் எனக்கு வேண்டாம் என உறுதியாக இருக்க மயிலின் அம்மா எப்படி சதி செய்து தனது மகளை மீண்டும் வாழ வைப்பது என யோசித்து வருகிறார்.

தங்கப்பதக்கம்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர் National Bench Press Weigh Lifting Championshipல் தங்கப் பதக்கம் வென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சீரியலில் முத்துவேலாக நடிக்கும் அஜய் ரத்னம் எடை தூக்கும் போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அந்த சந்தோஷ செய்தியை வீடியோவுடன் நடிகர் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.