வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில் தற்போது மயில் தன்னை விட இரண்டு வயது மூத்தவர், டிகிரி படித்திருக்கிறாள் என சொன்னது பொய், இவள் வெறும் 12+ தான் படித்திருக்கிறாள் என அனைத்து உண்மையையும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறிவிட்டார் சரவணன்.

இதை தொடர்ந்து மயிலின் அப்பா அம்மா பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு வந்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.
குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்
அப்படி என்ன நடந்துவிட்டது என எங்கள் மகளை தவறாக பேசுகிறார்கள் என மயிலின் பெற்றோர் கேட்க, எங்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என கூறுகிறார்கள். இதை அறிந்தபின் மயிலின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.

இறுதியாக, உங்கள் மகளை உங்கள் வீட்டிற்கே அழைத்து செல்லுங்கள் என பாண்டியன் கூறுகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.