குடும்பத்தினர் முன் திடீரென சரவணன் செய்த காரியம், கடும் ஷாக்கில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் பூதாகரமாக வெடித்துள்ளது சரவணன்-மயில் பிரச்சனை. தனது மனைவி பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் கூறினால் அவர்களும் கஷ்டப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சரவணன் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.
ஆனால் மயிலோ அவரது பொறுமையை சோதிக்கும் வகையில் அவரையே கோமதி-பாண்டியன் திட்டும் அளவிற்கு பொய் கூறி திட்டுவாங்க வைத்து வருகிறார்.

எபிசோட்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில், கோமதி-பாண்டியன் இருவரும் மாறி மாறி சரவணனிடம் என்ன தான் பிரச்சனை என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

எவ்வளவோ சமாளித்தும் முடியாததால் சரவணன் தன்னால் முடியாமல் பாண்டியனை கட்டியணைத்து கதறி கதறி அழுகிறார். அவர் இப்படி அழுவதை கண்டு பாண்டியன்-கோமதி ஷாக் ஆகி அவர்களும் அழுகிறார்கள்.
ஆனால் இன்றைய எபிசோடில் சரவணன் இன்னும் உண்மையை சொல்லவில்லை.
